TNPSC Thervupettagam

வறுமை மற்றும் பகிரப்பட்ட வளம் 2022 - சரிசெய்யும் நடைமுறை

October 12 , 2022 646 days 412 0
  • உலக வங்கியானது “வறுமை மற்றும் பகிரப்பட்ட வளம் 2022 - சரிசெய்யும் நடைமுறை” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • 2015 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய வறுமைக் குறைப்பு நடைமுறையின் வேகம் குறைந்து வருகிறது.
  • 2015 ஆம் ஆண்டு வாக்கில், உலகளாவிய தீவிர-வறுமை விகிதம் பாதிக்கு மேல் குறைக்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில் மட்டும், தீவிர வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை 70 மில்லியனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
  • 1990 ஆம் ஆண்டில் உலகளாவிய வறுமைக் கண்காணிப்பு தொடங்கியதில் இருந்து இது ஒரு வருடத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய அதிகரிப்பாகும்.
  • தற்போதையப் போக்குகளின் அடிப்படையில், 574 மில்லியன் மக்கள் (உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 7%) 2030 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு 2.15 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்ற நிலையில், இதில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்காவில் உள்ளனர்.
  • 2011 ஆம் ஆண்டை விட 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் தீவிர வறுமை 12.3% புள்ளிகள் குறைவாக இருந்தது.
  • 2011 ஆம் ஆண்டில் 22.5% ஆக இருந்த வறுமையின் உள்ளவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 10.2% ஆகக் குறைந்துள்ளது.
  • 2011 ஆம் ஆண்டில் 26.3% ஆக இருந்த கிராமப்புற வறுமை 2019 ஆம் ஆண்டில் 11.6% ஆகக் குறைந்ததால், நகர்ப்புற இந்தியாவுடன் ஒப்பிடும் போது கிராமப்புறங்களில் வறுமைக் குறைப்பு அதிகமாக இருந்தது.
  • இதே காலக் கட்டத்தில் நகர்ப்புறங்களில் வறுமையின் சரிவு 14.2% என்ற அளவிலிருந்து 6.3% ஆக இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்