TNPSC Thervupettagam

வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு சிறப்பு உதவி

February 12 , 2019 1985 days 600 0
  • வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளது என்று வகைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 2000 ரூபாயைப் பங்கிட்டுக் கொடுக்கும் வகையிலான வறுமை ஒழிப்புத் திட்டத்தை தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்றது.
  • குறிப்பாக விவசாய கூலிகள், நகர்ப்புற ஏழைகள், கட்டுமானம், மின்சாரம், விசைத்தறி, மீன்பிடித்தல், தீப்பெட்டித் தொழில் ஆகிய துறைகளில் உள்ள தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் உதவியளிக்கும்.
  • இந்த உதவி மொத்தமாக 60 லட்சம் குடும்பங்களுக்கு, கிராமப்புறங்களில் 35 லட்சம் குடும்பங்களுக்கும் நகர்ப்புறங்களில் 25 லட்சம் குடும்பங்களுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
  • இதற்காக அரசு 1200 கோடி ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.
  • முதலமைச்சர் கே. பழனிச்சாமி சட்டப் பேரவையின் விதி 110-ன் கீழ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்