கடனைத் திரும்பப் பெறுவதற்கான கடன் வழங்கீட்டு நிறுவனங்களின் வற்புறுத்தல் நடவடிக்கைகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ஒரு மசோதாவை தமிழக அரசானது அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த மசோதாவிற்கு 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடன் வழங்கீட்டு நிறுவனங்கள் (வலுக்கட்டாய கடன் வசூலிப்பு மீதான நடவடிக்கைகளைத் தடுக்கும்) மசோதா என்று பெயரிடப் பட்டுள்ளது.
கடன் வாங்குபவரை அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களை மிரட்டுவது, தொல்லை கொடுத்தல் அல்லது வன்முறையைப் பயன்படுத்துதல், அக்கடன் வாங்குபவருக்குச் சொந்தமான அல்லது அவரால் பயன்படுத்தப்படும் எந்தவொரு சொத்திலும் இவர்கள் தலையிடுவது ஆகியவை குற்றமாக கருதப்படும் விளக்கத்தின் ஒரு பகுதியாகும்.
இதில் குறிப்பிட்ட சில குற்றங்களுக்கான தண்டனைகளில் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அடங்கும் என்பதோடு இது ஐந்து ஆண்டுகள் வரையில் நீட்டிக்கப் படலாம் அல்லது ஐந்து லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.