TNPSC Thervupettagam

வலுக்கட்டாயமாக இடம் பெயர்த்தப்பட்ட மக்கள்

November 7 , 2022 623 days 297 0
  • அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையத்தின் அறிக்கையின்படி, பூமியில் வாழும் 77 பேரில் ஒருவர் வலுக்கட்டாயமாக இடம் பெயர்த்தப்பட்டுள்ளனர்.
  • துன்புறுத்தல், மோதல்கள், வன்முறை, மனித உரிமை மீறல்கள் மற்றும் பொது ஒழுங்கைக் கடுமையாகச் சீர்குலைக்கும் நிகழ்வுகள் காரணமாக தங்கள் வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 103 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 25.7 மில்லியனாக இருந்த உலகளாவிய அகதிகள் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பினை தேடும் மக்களின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்து 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 32 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • இந்த ஆண்டு ஜூன் மாத இறுதியில், உலகின் அனைத்து அகதிகளில் பாதிக்கும் மேற் பட்டவர்கள் (56 சதவீதம்) சிரியா, வெனிசுலா அல்லது உக்ரேனிய நாட்டவர்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்