சமீபத்தில், செவ்வாய்க் கிரகமானது ஒரு மிகவும் வலுவான சூரிய துகள் நிகழ்வின் தாக்கத்திற்கு உட்பட்டது.
செவ்வாய்க் கிரகத்தின் மேற்பரப்பைத் தாக்கும் சூரியத் துகள்களால் வெளிப்படும் கதிர்வீச்சு, ஒரு மார்பக ஊடுகதிர் ஆய்வின் கதிர்வீச்சினை விட 30 மடங்கு அதிகமாக இருந்தது.
சூரியன் தனது மேற்பரப்பில் இருந்து நேரடியாகப் புரோட்டான்களை வெளியிடும் நிகழ்வானது வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வு ஆகும்.
பூமியின் காந்தப்புலம் ஆனது, சூரியன் உமிழும் கதிர்வீச்சுகளைத் திசைதிருப்பும் வகையிலான ஒரு பாதுகாப்புக் கவசமாகச் செயல்படுகிறது.
வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வானது, ஓராண்டிற்கும் மேலான ஒரு காலக் கட்டத்தில் ஓசோன் அளவைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
ஒரு வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வானது பொதுவாக 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும்.
பதிவுகளின் படி, சமீபத்திய வலுவான சூரிய துகள் வெளியீட்டு நிகழ்வு ஆனது கி.பி 993 ஆம் ஆண்டில் பதிவு செய்யப் பட்டது.