பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனமானது, நிறுவனங்களை அவற்றின் நிறுவன மதிப்பீட்டின் அடிப்படையிலான ஒரு பட்டியலைத் தொகுத்துள்ளது.
பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு தரவரிசையின் படி, மதிப்பு மிக்க 150 முன்னணி நிறுவனங்கள் மற்றும் வலுவான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சிவிஸ்காம் என்ற நிறுவனமானது 92/100 மதிப்பீட்டு மற்றும் AAA+ என்ற உயரடுக்கு மதிப்பீட்டைப் பெற்ற வலுவான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனம் ஆகும்.
அதைத் தொடர்ந்து ஜியோ மற்றும் எடிசலாட் ஆகியவை முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது வலுவான தொலைத்தொடர்புச் சேவை வழங்கீட்டு நிறுவனங்களாக உள்ளன.
ஹுவாவே நிறுவனமானது மிகவும் மதிப்புமிக்க மற்றும் வலுவான தொலைத் தொடர்பு உள்கட்டமைப்புச் சேவை வழங்கீட்டு நிறுவனமாகத் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளது.