தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்ட 'இ-முன்னேற்றம்' மற்றும் 'ஐடி நண்பன்' (தகவல் தொழில்நுட்ப நண்பன்) என்ற இரண்டு வலைதளங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
'கீழடி விசைப்பலகை' மற்றும் 'தமிழி - தமிழிணைய ஒருங்குறி மாற்றி' ஆகிய இரண்டு தமிழ் கணினி மென்பொருளையும் அவர் வெளியிட்டார்.
இ-முன்னேற்றம் என்ற தளமானது தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்ய உதவும் ஒரு தளமாகும்.
இரண்டாவதாக, ஐடி நண்பன் என்ற தளமானது மாநில அரசு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உதவும்.