சமீபத்திய வலையமைப்பு தயார் நிலைக் குறியீட்டில் (NRI 2024) இந்தியா 11 இடங்கள் முன்னேறி உலகளவில் 49வது இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் DC நகரில் உள்ள போர்ட்லன்ஸ் நிறுவனமானது இந்தக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில், தொலைத்தொடர்பு பரவல் அடர்த்தியானது 75.2 சதவீதத்தில் இருந்து 84.69% ஆக உயர்ந்துள்ள அதே சமயம் கம்பியில்லா இணைப்புகள் சுமார் 119 கோடியை எட்டியுள்ளன.
குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுள், வியட்நாம் நாட்டிற்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு அறிவியல் வெளியீடுகள், செயற்கை நுண்ணறிவு சார் திறமை வளம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பச் சேவைகள் மீதான ஏற்றுமதி ஆகியவற்றில் இந்தியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
"உள்நாட்டுச் சந்தை அளவில்" 3வது இடத்தையும், "தொலைத்தொடர்புச் சேவைகளில் வருடாந்திர முதலீடு" 4வது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது.
அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் பின்லாந்து ஆகியவை இக்குறியீட்டில் முதலிடத்தில் உள்ளன.
இதில் சீனா 17வது இடத்திலும், வங்காளதேசம் 89வது இடத்திலும், பாகிஸ்தான் 97வது இடத்திலும் உள்ளன.