நாமக்கல்லில் உள்ள கொல்லிமலையில் இரண்டு நாள் வல்வில் ஓரி திருவிழா ஆகஸ்டு 2ம் தேதி தொடங்கப்பட்டது.
கி.பி.200ம் ஆண்டில் கொல்லி மலைகளை ஆட்சி செய்த மன்னன் வல்வில் ஓரியின் புகழை நினைவுகூற வேண்டி ஒவ்வொரு வருடமும் மாவட்ட நிர்வாகம் இத்திருவிழாவை நடத்திக் கொண்டிருக்கின்றது.
இந்த மன்னன் தனது வில் வித்தைக்காகவும் தனது வள்ளல் தன்மைக்காகவும் பெரிதும் அறியப்படுகிறார்.