சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம் ஆனது "வளங் காப்பகங்களுக்கு வெளியே காணப்படும் புலிகளைக் கண்காணிப்பதற்கான" பகுதிகளின் எல்லைகளை முடிவு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இது மனித-விலங்கு மோதலைக் குறைப்பது மற்றும் வேட்டையாடலைத் தடுக்க என்று புலிகள் வளங்காப்பகங்களுக்கு வெளியே காணப்படும் புலிகளின் கண்காணிப்பை மேம்படுத்துவது ஆகிய இரண்டு முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்த உள்ளது.
நாட்டின் மதிப்பிடப்பட்ட மொத்தம் 3,682 புலிகளில், சுமார் 30 சதவீதப் புலிகள் ஆனது அறிவிக்கப்பட்ட காப்பகங்களுக்கு வெளியே காணப்படுகின்றன.
தேசியப் புலிகள் வளங்காப்பு ஆணையமானது (NTCA) இந்த திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
NTCA ஆனது இதற்காக 10 மாநிலங்களில் 80 வனப் பிரிவுகளை அடையாளம் கண்டு உள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் பதிவான புலிகள்-மனிதர்கள் மோதலில் 378 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பதோடு இந்த மோதல்களில் 2022 ஆம் ஆண்டில் மட்டும் 110 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.