TNPSC Thervupettagam

வளர்ச்சி - கணிப்பு

April 13 , 2019 1925 days 625 0
  • சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund - IMF) தலைமைப் பொருளாதார அறிஞரான கீதா கோபிநாத் என்பவர் 2019-20 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை 7.7 சதவிகிதத்திலிருந்து 7.5 சதவிகிதமாக குறைத்துக் கணக்கிட்டுள்ளார்.
  • இவர் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவதற்காக பயன்படுத்தப்படும் அடிப்படை ஆண்டு அல்லது பணவாட்டக் காரணி குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இவர் அரசினால் வெளியிடப்படும் புள்ளியியலில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
  • இந்தியா IMF-ன் சிறப்புத் தரவு வழங்கல் தரத்திற்கு ஒரு உறுப்பினராக உள்ளது.
இந்தியாவில் புள்ளியியல்
  • மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகமானது (Ministry of Statistics and Programme Implementation - MOSPI) புள்ளியியல் தொடர்பாக அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் தரங்கள் குறித்த அறிக்கையை வெளியிடுகின்றது.
  • இது புள்ளியியல் துறை மற்றும் திட்டம் அமலாக்கத் துறை ஆகியவை இரண்டும் இணைந்த பின்பு 1999 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
  • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office - NSO) என்று அழைக்கப்படும் புள்ளியியல் பிரிவானது பின்வருவனவற்றைக் கொண்டிருக்கும்.
    • தேசியப் புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office - CSO)
    • தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (The National Sample Survey Office - NSSO)
    • கணினி மையம்
  • திட்டம் செயல்படுத்துதல் துறையானது பின்வரும் மூன்று பிரிவுகளைக் கொண்டுள்ளது.
    • இருபது அம்சத் திட்டம்
    • கட்டமைப்பை மேற்பார்வையிடுதல் மற்றும் திட்டத்தை மேற்பார்வையிடுதல்
    • பாராளுமன்ற உறுப்பினரின் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம் (MPLADs - Members of Parliament Local Area Development Scheme).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்