ஆசிய வளர்ச்சி வங்கியானது (Asian Development Bank - ADB) 2019-20 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது 7.2 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்துள்ளது. இதற்குமுன் இது இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவிகிதமாக இருக்கும் என்று கணித்திருந்தது.
உள்நாட்டில் ஏற்பட்ட வருவாய்ப் பற்றாக்குறை மற்றும் உலக தேவைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் ஆகியவற்றின் காரணமாக இது நிகழ்ந்துள்ளது.
ADB ஆனது 1966 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதியில் உருவாக்கப்பட்ட பிராந்திய வளர்ச்சி வங்கியாகும். இதன் தலைமையிடம் பிலிப்பைன்ஸின் மணிலா மெட்ரோவின் மண்டல்யுயாங் நகரத்தில் உள்ளது.
இது தொடங்கப்பட்ட போது உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக இருந்தது. ஆனால் தற்பொழுது இது 68 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது. இதில் 49 நாடுகள் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்ததாகவும் மீதமுள்ள 19 நாடுகள் மற்ற பகுதிகளைச் சேர்ந்ததாகவும் உள்ளன.