வளிமக் கரைசல்களின் கதிர்வீச்சு கட்டாயப்படுத்துதல் – வெளிப்புற இமயமலை
June 10 , 2020 1633 days 614 0
அண்மையில், ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில், வளிமக்கரைசல்களின் கதிர்வீச்சு கட்டாயப்படுத்துதல் என்ற ஒரு நிகழ்வு கண்டறியப் பட்டுள்ளது. அதாவது மனிதர்களின் தாக்கத்தால் வளிமக் கரைசல்கள் மேற்கு வெளிப்புற-இமயமலைகளின் உயர்நிலையில் அதிகமாக காணப்படுவதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
வளிமக் கரைசல்களின் கதிர்வீச்சு கட்டாயப்படுத்துதல் என்பது மனிதர்களின் தாக்கத்தால் வளிமண்டலத்தின் மேற்புறத்திலும் மேற்பரப்பிலும் உள்ள கதிரியக்கப் பாய்வுகளில் மற்றும் வளிமண்டலத்திற்குள் இருக்கும் கதிர்வீச்சை உறிஞ்சுவதாகும்.
நைனிடாலில் உள்ள ஆர்யபட்டா கண்காணிப்பு அறிவியலுக்கான ஆராய்ச்சி நிறுவனமானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் ஒரு தன்னாட்சி ஆராய்ச்சி நிறுவனம் ஆகும்.
வளிமக் கரைசல்கள் ஒரு வாயு அல்லது திரவச் சூழலில் மிதக்கும் திரவ அல்லது திடமான துகள்களின் ஒரு கலவையாக இருக்கும் என்று வரையறுக்கப் படுகின்றன.