ஏரோ இந்தியா 2019 நிகழ்ச்சியில் பாரத் மின்னணு நிறுவனம் உலகம் முழுவதும் எப்பொழுதும் அதிகரித்துக் கொண்டே வரும் குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு புதுமையான தீர்வாக வளிமண்டல நீர் உற்பத்திக் கருவியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது.
இதனை வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்திலிருந்து நேரடியாக நீரை உற்பத்தி செய்வதற்குப் பயன்படுத்த முடியும்.
இது வளிமண்டலத்தில் உள்ள ஈரப்பதத்தில் இருந்து நீரைப் பிரித்தெடுத்து அதை தூய்மையாக்கிட ஒரு புதுமையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.
இது சுத்தமான, பாதுகாப்பான மற்றும் தூய்மையான பருகத் தகுந்த குடிநீரை உற்பத்தி செய்வதற்காக வளிமண்டல அழுத்தத்தைத் திரவமாக்குவதற்கு வேண்டி வெப்ப பரிமாற்றிகளைப் பயன்படுத்துகின்றது.