TNPSC Thervupettagam

வளிமம் நிரப்பப்பட்ட காற்றியக்க வேக ஒடுக்கி

September 8 , 2022 683 days 463 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆனது திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா பூமத்திய ரேகை ஏவுதளத்தில் இருந்து ரோகிணி-300 (RH300 Mk II) எனப்படும் ஆய்வு ஏவுகலத்தில் வளிமம் நிரப்பப்பட்ட ஒரு காற்றியக்க வேக ஒடுக்கி தொழில் நுட்பத்தைப் பொருத்தி வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
  • இது வளிமண்டல நுழைவு விண்வெளிப் பொருள்களுக்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பமாகும்.
  • இது இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் (VSSC) வடிவமைக்கப் பட்டு உருவாக்கப்பட்டது.
  • வளிமண்டலத்தின் வழியாக கீழே விழும் ஒரு பொருளின் வேகத்தை குறைக்க வளிமம் நிரப்பப்பட்ட காற்றியக்க வேக ஒடுக்கி உதவுகிறது.
  • இது காற்றியக்க இழுவை மூலம் ஒரு விண்வெளிப் பொருளின் வேகத்தைச் சரியான அளவில் குறைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்