செப்டம்பர் 17 ஆம் தேதியன்று ஏற்பட்ட பகுதியளவு சந்திர கிரகணத்தைத் தொடர்ந்து சமீபத்தில் ஒரு வளைய சூரிய கிரகணம் ஏற்பட்டது.
ஈஸ்டர் தீவு மற்றும் சிலி மற்றும் அர்ஜென்டினாவின் தெற்கு முனைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய பகுதிகளில் மட்டுமே இந்த வளைய கிரகணத்தைக் காண முடிந்தது.
சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாத அளவுக்கு சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது வளைய கிரகணம் ஏற்படுகிறது.
எனவே இது "நெருப்பு வளையம்" எனப்படும் பிரகாசமான ஒளி வளையத்தால் சூழப் பட்ட இருண்ட நிழலை உருவாக்குகிறது.
இத்தகைய அடுத்த கிரகணம் ஆனது, 2025 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதியன்று ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் புலப்படும்.
இரண்டாவது, சூரிய கிரகணம் ஆனது செப்டம்பர் 21 ஆம் தேதியன்று ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகாவில் புலப்படும்.