TNPSC Thervupettagam

வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா, 2023

December 8 , 2023 226 days 143 0
  • இந்த மசோதாவானது, தற்போது 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இது 1961 ஆம் ஆண்டு வழக்கறிஞர்கள் சட்டத்தினைத் திருத்தியமைக்கிறது.
  • இது 1879 ஆம் ஆண்டு சட்டப் பயிற்சியாளர்கள் சட்டத்தின் கீழ் உள்ள வாடிக்கை பிடிப்பு தொடர்பான சில பிரிவுகளை இந்த மசோதா ரத்து செய்கிறது.
  • 1961 ஆம் ஆண்டு சட்டமானது, சட்டப் பயிற்சியாளர்கள் தொடர்பான சட்டத்தை ஒருங்கிணைத்து வழக்கறிஞர் கழகம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர் கழகம் ஆகியவற்றினை உருவாக்குகிறது.
  • இந்தப் புதிய மசோதாவானது, ஒரே சட்டத்தின் மூலம் சட்டத் தொழிலை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு வாடிக்கைப் பிடிப்பு என்ற முறையையும் ஒழிக்க முயல்கிறது.
  • ஒவ்வொரு உயர் நீதிமன்றமும், மாவட்ட நீதிபதியும், அமர்வு நீதிபதியும், மாவட்ட ஆட்சியரும், வருவாய் அதிகாரியும் (மாவட்ட ஆட்சியர் பதவிக்கு மேல் நிலையில் உள்ளவர்கள்) வாடிக்கைப் பிடிப்பு குறித்தப் பட்டியலை உருவாக்கி வெளியிடலாம் என்று இந்த மசோதா கூறுகிறது.
  • வாடிக்கை பிடிப்பு என்பது ஒரு நபர் என்பவர்,
    • எந்தவொரு கட்டணத்திற்கும் ஈடாக தொழில்ரீதியிலான ஒரு சட்ட நடைமுறையில் ஈடுபடுவதற்கு முயலுகின்ற ஒரு சட்ட நிபுணரைப் பணியில் அமர்த்தச் செய்கின்ற முறையை முன்மொழிவார்,
    • அல்லது (ii) சிவில் அல்லது குற்றவியல் நீதிமன்றங்கள், வருவாய்-அலுவலகங்கள் அல்லது இரயில் நிலையங்கள் போன்ற இடங்களுக்கு இது போன்ற வேலை வாய்ப்பைப் பெற அடிக்கடி செல்வார் என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்