TNPSC Thervupettagam

வழக்கு விசாரணையினை மாற்றுவதற்கான அதிகாரம்

February 28 , 2024 271 days 225 0
  • ஒரு வழக்கினை விசாரிக்கும் முதல் முகமையானது தனது விசாரணையை முடித்து, சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தனது இறுதி அறிக்கையை தாக்கல் செய்த பிறகு, அந்த வழக்கின் விசாரணையை ஒரு முகமையிலிருந்து மற்றொரு முகமைக்கு மாற்றச் செய்வதற்கு காவல்துறை தலைமை இயக்குநருக்கு அதிகாரம் இல்லை.
  • சென்னை உயர் நீதிமன்றம் ஆனது இந்திய தண்டனைச் சட்டத்தின் 354C (நோக்கி யுவத்தல்) என்ற பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கைக் கையாளும் போது இந்த கூற்றினை வெளியிட்டது.
  • 2019 ஆம் ஆண்டில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 354C பிரிவு, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 4வது பிரிவு மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66Eவது பிரிவு ஆகியவற்றின் கீழ் காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
  • விசாரணை முடிந்ததும், காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததையடுத்து, அது குற்றவியல் நீதிபதியால்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • ஆனால், அப்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் இந்த வழக்கை நகரக் காவல்துறையிலிருந்து குற்றப் புலனாய்வுத் துறையின் குற்றப் பிரிவிற்கு மாற்றினார்.
  • குற்றவியல் நீதிபதி அல்லது காவல்துறை தலைமை இயக்குநர்களுக்கு எந்தவொரு வழக்கிலும் மறு விசாரணை மேற்கொள்வதற்கு (டி நோவோ) உத்தரவிடச் சட்டத்தில் அனுமதியில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக் காட்டியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்