TNPSC Thervupettagam

வாகன உடைப்புக் கொள்கை 2024

September 5 , 2024 35 days 79 0
  • வணிக மற்றும் பயணியர் வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆனது, பழைய வாகனங்களை அகற்றுவதற்குப் பதிலாக புதிய வாகனங்களை வாங்குவதற்கு செல்லுபடியாகும் வைப்புச் சான்றிதழுடன்  கூடிய தள்ளுபடியை வழங்க உள்ளன.
  • இந்தத் திட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் செல்லுபடி ஆகும் என்பதோடு இது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை செயல்பாட்டில் இருக்கும்.
  • நாட்டில் 1,000 வாகன உடைப்பு மையங்கள் மற்றும் 400 தானியங்கி தர நிர்ணயச் சோதனை மையங்கள் நிறுவப்பட வேண்டும்.
  • உத்தரப் பிரதேசமானது தற்போது அதிக எண்ணிக்கையிலான செயல்பாட்டில் உள்ள பதிவு மற்றும் வாகன உடைப்பு (RVSF) மையங்களைக் கொண்ட மாநிலமாக நாட்டில் முன்னணியில் உள்ளது.
  • மத்திய அரசானது, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தேசிய வாகன உடைப்புக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.
  • இது தரமிழந்த மற்றும் மாசுபாடுகளை உண்டாக்கும் வாகனங்களைப் படிப்படியாக அகற்றுவதையும், சுழற்சி முறை பயன்பாடு சார்ந்த பொருளாதாரத்தினை நன்கு மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை அகற்றிய பிறகு வாங்கப் படும் வாகனங்களுக்கு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச (UTs) அரசுகள் ஆனது சாலை வரியில் 25 சதவீதம் வரையிலான வரி விலக்கு அளிக்கும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
  • வாகன உடைப்புக் கொள்கை ஆனது 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்