2021 ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி வசூலானது ரூ.3.35 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
2020 ஆம் நிதி ஆண்டில் இது ரூ.1.78 லட்சம் கோடியாக இருந்தது.
இதில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி மட்டுமின்றி, விமான எரிபொருள், இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் ஆகியவை மீதான கலால் வரிகளும் அடங்கும்.
வரி வசூலானது மேலும் அதிகமாக இருந்திருக்கும், ஆனால் கடந்த ஆண்டில் விதிக்கப் பட்ட ஊரடங்கினால் எரிபொருள் விற்பனை சரிந்துள்ளதால் அது குறைவாகவே உள்ளது.
2020 ஆம் ஆண்டின் மார்ச் மாத இறுதி மற்றும் மே மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு 13 ரூபாயாகவும் டீசலுக்கான கலால் வரியை லிட்டருக்கு 16 ரூபாயாகவும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
சில மாநிலங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு அதிகமாகவும் டீசல் விலை லிட்டருக்கு 90 ரூபாய்க்கு அதிகமாகவும் விற்கப் படுவதற்குக் காரணம் அதிக வரி விதிப்பே அன்றி கச்சா எண்ணெயின் விலை உயர்வு அல்ல.