வாகனங்களில் எந்த வகையான எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை குறித்துக் காட்டுவதற்காக முப்பரிமாண படிம அடிப்படையிலான வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டுவது தொடர்பான மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் கருத்தினை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்திய உச்சநீதிமன்றமானது 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 30க்குள் தேசியத் தலைநகரமான தில்லியில் செல்லும் வாகனங்களின் மீது வண்ணமிடப்பட்ட ஸ்டிக்கர்களின் பயன்பாட்டை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் தெரிவித்தது.
மேலும் வாகனங்கள் மீதான வண்ணமிடப்பட்ட ஸ்டிக்கரானது தில்லி மற்றும் தேசியத் தலைநகரப் பகுதி ஆகியவற்றிற்கு மட்டும் பொருந்தும். தலைநகரில் ஏற்படும் காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டது.
இதற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் வாகனங்களை இயக்க பயன்படுத்தப்படும் எரிபொருளின் வகையை முப்பரிமாண படிம அடிப்படையில் வண்ணமிடப்பட்ட ஸ்டிக்கர்களை பயன்படுத்தி அறிவதை செயல்படுத்தும் இந்தியாவின் முதலாவது நகரம் தில்லி ஆகும்.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முன்மொழிந்த இத்திட்டத்தின் படி.
லேசான நீல வண்ணமானது வாகனங்கள் பெட்ரோல் மற்றும் CNG - மூலம் இயங்குவதைக் குறிக்கும்.
ஆரஞ்சு வண்ண ஸ்டிக்கரானது வாகனங்கள் டீசல் மூலம் இயங்குவதைக் குறிக்கும்.