சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) ஆனது BS-VI மாசு உமிழ்வு விதிமுறைகளின் கீழ் அனுமதி கோரும் வாகனங்களுக்கான புதிய மாசு உமிழ்வு சோதனை தரநிலைகளை அறிவித்துள்ளது.
கலவை எரிபொருள் விருப்பத் தெரிவுகளைக் கொண்ட அனைத்து இருவகை எரிபொருள் வாகனங்களும் வாயு மாசுபடுத்திகள் மற்றும் நுண்மத் துகள்கள் சார்ந்த மாசுபடுத்திகளுக்கான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இருப்பினும், ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள், நைட்ரஜன் ஆக்சைடு சோதனைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
நுண்மத் துகள்களின் நிறை மற்றும் எண்ணிக்கை வரம்புகள் ஆனது, நேரடி எரிபொருள் உட்செலுத்துதல் இயந்திரங்களைக் கொண்ட மகிழுந்துகளுக்கு மட்டுமே பொருந்தும்.
CO2 உமிழ்வு மற்றும் எரிபொருள் நுகர்வு ஆனது 137வது வாகன தொழில்துறை தரநிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறையின்படி மற்றும் அவ்வப்போது திருத்தப்பட்டபடி மதிப்பிடப்படும்.