இந்தியா, வாகனச் சந்தையில்5 சதவிகித வளர்ச்சியுடன் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது சென்ற ஆண்டில் ஜெர்மனியின் வாகனச் சந்தை 2.8 சதவிகிதத்தில் 3.8 மில்லியன் வாகன விற்பனையோடு வளர்ச்சி அடைந்ததைக் காட்டிலும் அதிகமாகும்.
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, டிசம்பரில் விற்பனையான புதிய வாகனங்களின் எண்ணிக்கை 14 சதவிகித வளர்ச்சியோடு 3, 22, 074 ஆகும்.
முழு ஆண்டு அளவிலான விற்பனை புதிய உச்சத்தில்01 மில்லியன் வாகனங்களின் விற்பனையோடு 10 சதவிகித வளர்ச்சியில் உயர்ந்துள்ளது.
இந்தியா, வாகன உற்பத்தியில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு பின் வரிசையில் உள்ளது.
மாருதி சுஜீகி இந்திய நிறுவனம் 80 சதவிகித சந்தைப் பங்களிப்போடு பயணிகள் வாகன உற்பத்தியில் தனது முன்னிலையை உறுதிப்படுத்தியுள்ளது.
ஐஎச்எஸ் மார்கிட் (IHS-Markit) கொடுத்த தகவல்களின் படி 2010ம் ஆண்டுக்குப் பிறகு முதன் முறையாக வளரும் நாடுகள் ஒட்டு மொத்த உற்பத்தியில் பாதியை உற்பத்தி செய்கின்றன. 2009ம் ஆண்டில் இருந்து சீனா உலகின் மிகப்பெரியச் சந்தையாக விளங்கி வருகிறது.
இந்தியா சமீப ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை ஆற்றி வருகிறது. இதன் வாகனச் சந்தை கடந்த பத்தாண்டில் இரட்டிப்பாகியுள்ளது.
உலக வங்கியின் தரவுகள், தனிநபர் வருமான அடிப்படையில் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் 70 சதவிகித வளர்ச்சியில் 1700 டாலர்கள் என்ற அளவிற்கு வளர்ந்துள்ளதைக் காட்டுகிறது.