ஐந்தாவது ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் திட்டம் 75ன் கீழ் கட்டமைக்கப் பட்ட வாகிர் எனப்படும் கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியக் கடற்படைக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், பிரான்சில் உள்ள நேவல் குரூப் என்ற நிறுவனத்தின் ஒரு ஒத்துழைப்புடன், மும்பையில் உள்ள மசாகான் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டமைக்கப் பட்டு வருகின்றன.
திட்டம்-75 ஆனது ஸ்கார்பியன் வடிவமைப்பிலான ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களின் உள்நாட்டுக் கட்டுமானப் பணிகளை உள்ளடக்கியது.
இந்தத் திட்டமானது, அதிநவீன தன்னியக்கக் காற்று உந்துவிசை அமைப்பினைக் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் தொடரின் 6வது & கடைசி நீர்மூழ்கிக் கப்பலான வாக்ஷீர் அடுத்த ஆண்டு கடற் படையிடம் வழங்கப்படும்.