"வாக் நாக்" ஆயுதத்தினை மகாராஷ்டிரா கொண்டு வருவதற்கு ஒப்பந்தம்
October 10 , 2023 411 days 319 0
விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் (V மற்றும் A) அருங்காட்சியகம் ஆனது மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற 'புலி நகம்' என்ற ஆயுதத்தினை இந்திய அரசு 3 ஆண்டுகளுக்கு மும்பை அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்த முடியும்.
இந்த ஆயுதம் ஆனது, ஒரு காலத்தில் மராட்டிய அரசர் சத்ரபதி சிவாஜி அவர்களால் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த 'புலி நகங்கள்' வாக் நாக் என்றும் அழைக்கப் படுகின்றன.
நாட்டுப்புறக் கதைகளில் கூறப்படும் இந்த ஆயுதங்கள், வியத்தகு இராணுவப் போர்களில் முக்கியப் பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
1659 ஆம் ஆண்டில், சத்ரபதி சிவாஜி அவர்கள், இந்த உலோக நகங்களைத் தனது கையில் மறைத்து, பீஜப்பூர் இராணுவத் தளபதியான அப்சல் கானுக்கு எதிரானப் போரில் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.