TNPSC Thervupettagam

வாக்களிப்பதற்கான வயது

August 7 , 2023 350 days 193 0
  • மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வயதினை 18 ஆக குறைப்பதற்குப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
  • இது இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்களிப்பதற்கான குறைந்தபட்ச வயது ஆகும்.
  • இந்தக் கருத்தாக்கமானது உலகளாவிய நடைமுறைகள், இளையோர்களிடையே அதிகரித்து வரும் அரசியல் சார்ந்த கருத்துணர்வு மற்றும் இளையோர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நன்மைகள் போன்ற பல ஏராளமான சான்றுகளால் வலுப்படுத்தப் பட்ட ஒரு காரணம் என்று அக்குழு கூறியது.
  • எனினும், இந்தக் கருத்தாக்கத்தினை இந்தியத் தேர்தல் ஆணையம் எதிர்க்கிறது.
  • இந்தப் பொறுப்புகளுக்குத் தேவையான ஒரு அனுபவமும் பக்குவமும் 18 வயதுக்கு உட்பட்டவர்களிடம் எதிர்பார்ப்பது இயல்பிற்குப் புறம்பானது என்று கண்டறியப் பட்டு உள்ளது.
  • 2013 ஆம் ஆண்டு குற்றவியல் சட்டம் (திருத்தம்) என்ற சட்டத்தின் கீழ் இந்தியாவில் பாலியல் உறவு மேற்கொள்ளச் செய்வதற்கான ஒப்புதல் வயது என்பது பாலினத்தைப் பொருட்படுத்தாமல் 18 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
  • 1892 ஆம் ஆண்டில், புல்மோனி தாசி என்ற 10 வயது சிறுமியின் திருமணம் வழியிலான பலாத்காரம் மற்றும் அதன் மூலமான மரணமானது பாலியல் உறவு மேற்கொள்ளச் செய்வதற்கான ஒப்புதல் வயதை 10 வயதிலிருந்து 12 ஆக உயர்த்தியது.
  • 1949 ஆம் ஆண்டில், சிறு வயதிலேயே கர்ப்பம் தரித்தல் போன்ற பாதகமான விளைவுகள் குறித்து மகளிர் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொண்டதையடுத்து பிறகு இது 16 வயதாக உயர்த்தப்பட்டது.
  • 2013 ஆம் ஆண்டின் குற்றவியல் (திருத்தம்) சட்டம், பாலியல் உறவு மேற்கொள்வதற்கான ஒப்புதல் வயதினை 16 வயதிலிருந்து 18 ஆக உயர்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்