TNPSC Thervupettagam

வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறனில் மீட்சி – தமிழ்நாடு

January 30 , 2025 24 days 78 0
  • 2024 ஆம் ஆண்டு வருடாந்திர கல்வி நிலை அறிக்கையின் (ASER) படி, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மாநிலத்தில் வாசிப்பு மற்றும் எண்கணிதத்தில் குறிப்பிடத்தக்க மீட்சியானது பதிவாகியுள்ளது.
  • இதன்படி அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் 4.8% குழந்தைகளால் மட்டுமே, 2022 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தினை வாசிக்க முடிந்தது ஆனால் 2024 ஆம் ஆண்டில் இந்த முக்கிய எண்ணிக்கை 12% ஆக அதிகரித்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான நிலைகளுடன் ஒப்பிடும்போது, வாசிப்புத் திறனில் 10.4% அதிகரிப்புடனும், எண்கணித திறனில் 5.8% அதிகரிப்புடனும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் வாசிப்பு மற்றும் எண்கணிதத் திறன்கள் மேம்பட்டுள்ளன.
  • மூன்றாம் வகுப்பில் கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 27.7% பேர் கழித்தல் கணக்குகளையும் மற்றும் ஐந்தாம் வகுப்பில் கணக்கெடுக்கப்பட்ட குழந்தைகளில் சுமார் 20.7% பேர் வகுத்தல் கணக்குகளையும் செய்வதற்கான திறன்களைக் கொண்டிருந்தனர்.
  • தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் சேர்க்கையில் சரிவு என்பது பதிவாகியுள்ளது.
  • 2014 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் சேர்க்கை விகிதமானது, சுமார் 67.2 சதவீதத்தில் இருந்து 75.7% ஆக அதிகரித்திருந்தாலும், 2024 ஆம் ஆண்டில் அது 68.7% ஆகக் குறைந்து உள்ளது.
  • தனியார் பள்ளிகளின் சேர்க்கையானது நன்கு அதிகரித்து, 31 சதவீதத்துடன் கோவிட்-19 பெருந்தொற்றிற்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது.
  • 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடச் செய்யும் போது அங்கன்வாடிகளில் சேர்க்கையானது ஓரளவு குறைந்துள்ளது.
  • தமிழ்நாடு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண் கணிதத் திறன் (FLN) பயிற்சியில், தேசிய சராசரியான 83.2 சதவீதத்தினை விட அதிகமாக தொடர்ந்து முன்னணியில் உள்ளது.
  • இதில் சுமார் 90.4% பள்ளிகள் FLN பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கான உத்தரவைப் பெறுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்