TNPSC Thervupettagam

வாசுகி இண்டிகஸ்

April 23 , 2024 214 days 411 0
  • குஜராத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முதுகெலும்புடைய உயிரியின் புதைபடிவமானது, டி-ரெக்ஸ் இனத்தை விட நீளமான பாம்பின் எஞ்சிய பாகங்கள் என்று அறிவியலாளர்கள் கூறியுள்ளனர்.
  • 2005 ஆம் ஆண்டில் ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்ட 'வாசுகி இண்டிகஸ்' என்ற கண்டுபிடிப்பு மிகச் சமீபத்தில் ஒரு மாபெரும் பாம்பு என உறுதிப்படுத்தப்பட்டது.
  • அவை 47 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கட்ச் சதுப்பு நிலங்களில் வாழ்ந்தன.
  • பல்வேறு உயிரினங்களின், குறிப்பாக ஊர்வனவற்றின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியில் இந்தியாவின் முக்கியமான இணைப்பை இது நிறுவுகிறது.
  • ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பாம்பின் 27 முதுகெலும்புகளைக் கண்டறிந்துள்ளனர் என்ற நிலையில் அவற்றில் சில பெரிய மலைப்பாம்பு போல தோற்றமளிப்பதாகவும் விஷமற்றதாகவும் உள்ளன.
  • அறிவியலாளர்கள் இந்தப் பாம்பின் நீளம் 11-15 மீட்டர் (சுமார் 50 அடி) என்ற வரம்பில் இருக்க வேண்டும் என்றும் அது சுமார் 1 டன் எடை இருந்திருக்க வேண்டும் என்றும் மதிப்பிடுகின்றனர்.
  • அளவின் அடிப்படையில், வாசுகி இண்டிகஸ் ஆனது அழிந்து போன 42 அடி நீளமுள்ள தற்போது வரையில் நீளமானதாக கருதப்பட்ட டைட்டனோபோவா என்ற மிகப்பெரிய பாம்பை விட பெரியதாக இருக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்