- தமிழக அரசு மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வாடகை நீதிமன்றங்களை அமைப்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.
- சென்னை மாவட்டத்திற்கு 7 வாடகை நீதிமன்றங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- இவை தமிழ்நாடு உரிமைகள் ஒழுங்குமுறைகள் மற்றும் குத்தகையாளர் & நில உரிமையாளர்களின் பொறுப்புகள் சட்டம், 2017-ன் பிரிவு 32-ன் படி அமைக்கப்பட்டுள்ளது.
- இச்சட்டத்தின்படி, எழுத்து வடிவிலான குத்தகை உடன்படிக்கைகள் பெறுவது கட்டாயமாகும்.
- இந்த ஒப்பந்தமானது அதற்காக அமைக்கப்பட்ட நீதிப் பரிபாலன வாடகை ஆணையத்திடம் பதிவு செய்யப்பட வேண்டும்.
- நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் ஆகியோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பான விவகாரங்களை வாடகை நீதிமன்றங்கள் மட்டுமே விசாரித்து முடிவு எடுக்கும் உரிமையைப் பெற்றிருக்கும்.
- இத்தகைய சர்ச்சைகளைத் தீர்ப்பதில் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை.
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் செயல்முறை.