மத்திய அரசானது, 2022 ஆம் ஆண்டு வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) விதிகளை மாற்றி அமைத்துள்ளது.
திருமணமான தம்பதிகள் வாடகைத் தாய் முறையில் தானம் வழங்கப்பட்ட கரு முட்டைகள் அல்லது தானம் வழங்கப்பட்ட விந்தணுக்களைப் பயன்படுத்த அனுமதிப்பதை நோக்கமாகக் கொண்டு இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இது உடலியல் கோளாறுகள் உள்ளவர்களுக்கு ஒரு பெரிய தீர்வாக அமையும்.
அத்தகைய தானம் வழங்கப்பட்ட பால் அணுக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான விதிமுறையை சேர்த்த, 2023 ஆம் ஆண்டு (மார்ச் மாதத்தில் மேற் கொள்ளப் பட்ட) திருத்தத்தை இது ரத்து செய்தது.
இந்தத் திருத்தம் ஆனது தற்போது, திருமணமான தம்பதிகளில் கணவன் அல்லது மனைவி உடல்நலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சான்றளிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், தானம் வழங்கப்பட்ட பால் அணுக்களைப் பயன்படுத்த அனுமதிக்கிறது.
கடந்த ஆண்டு, மேயர்-ரோகிடான்ஸ்கி-குஸ்டர்-ஹவுசர் (MRKH) நோயினால் பாதிக்கப் பட்ட ஒரு பெண் 2023 ஆம் ஆண்டு திருத்தத்தினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.