வாடகைத் தாய் மூலம் பெறும் குழந்தைகள் பராமரிப்பு விடுப்பு
June 30 , 2024 150 days 209 0
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறும் பெண் அரசு ஊழியர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்க அனுமதிக்கும் வகையில், 1972 ஆம் ஆண்டு மத்திய குடிமைப் பணிகள் (விடுப்பு) விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி, குழந்தைப் பராமரிப்பு விடுப்புடன் கூடிய "பதிலித் தாய்" (வாடகைத் தாய் செயல்முறை மூலம் பிறக்கும் குழந்தையின் உண்மைத் தாய்) இந்த விடுமுறைகளுக்குத் தகுதியுடையவர் ஆவார்.
"இந்தச் செயல்முறையில் பங்காற்றும் தந்தைக்கும்" அரசாங்கம் 15 நாட்கள் மகப்பேறு கால விடுப்பினை வழங்குகிறது.
தற்போதைய விதிமுறைகள் ஆனது, "ஒரு பெண் அரசு ஊழியர் மற்றும் தனியாக குழந்தையை வளர்க்கும் ஆண் அரசு ஊழியர்" தங்கள் பணிக்காலம் முழுவதிலும் 730 நாட்கள் வரை குழந்தைப் பராமரிப்பு விடுப்பு எடுத்து தங்கள் இரண்டு வயதான குழந்தைகளைப் பராமரிக்க வழி வகை செய்கின்றன.