மெட்டா என்ற நிறுவனமானது, வாட்டர்வொர்த் எனப்படுகின்ற அதன் இணையவழி இணைப்பிற்கான கடலடிக் கம்பிவடத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
சுமார் 50,000 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட உள்ள இந்த கம்பி வடமானது, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் பிற இடங்களுக்கு மேம்பட்ட இணைய இணைப்பை வழங்கும்.
இது உலகின் மிக நீளமான கடலடிக் கம்பிவடத் திட்டமாக மாற உள்ளது.
கடலடிக் கம்பிவட இணைப்புகள் ஆனது, உலகப் பெருங்கடல்களின் வழியாக கண்டம் விட்டு கண்டம் இணைக்கப்படும் இணைய இணைப்பில் சுமார் 95 சதவீததத்திற்கும் அதிகமான பங்கைக் கொண்டிருக்கும்.
அவை எண்ணிமத் தொடர்பு, ஒளிப்படம் சார் அழைப்பு அனுபவங்கள், இயங்கலை பணப் பரிவர்த்தனைகள் மற்றும் பலவற்றைத் தடையின்றிச் செயல்படுத்த நன்கு வழி வகுக்கின்றன.