குஜராத்தின் வாட்நகரில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில், பல நூற்றாண்டுகளாக வெளிக் கொணரப்படாத கலாச்சார தொடர்ச்சிக்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
ஹரப்பா நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிந்தைய இதன் தொடர்ச்சியானது, "இருண்ட காலம்" என்பது ஒரு பொய்யாக இருக்கலாம் என்று வெளிபடுத்துகிறது.
பிற்கால வேதகால/பௌத்தத்திற்கு முந்தைய மகாஜனபதாக்கள் அல்லது பிரபுத்துவ குடியரசுகளுக்குச் சமகாலமான கி.மு. 800 ஆம் ஆண்டு வரை பழமையான மனித குடியேற்றத்தின் சான்றுகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் சரிவுக்கும் இரும்புக் காலம் தோன்றுவதற்கும் கந்தர், கோஷல், அவந்தி போன்ற நகரங்கள் தோன்றுவதற்கும் இடைப்பட்ட காலக்கட்டம் ஆனது பெரும்பாலும் இருண்ட காலமாகவே சித்தரிக்கப்படுகிறது.