இந்த அருங்காட்சியகம் ஆனது, அந்த நகரத்தின் சுமார் 2,500 ஆண்டுகால வரலாற்றை ஒரு உள்ளார்ந்த மற்றும் ஊடாடும் அனுபவத்தின் மூலம் ஒரு விரிவான காட்சியினை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 5,000க்கும் மேற்பட்ட கலைப் பொருட்களை நன்கு காட்சிப்படுத்துகின்ற இந்த அருங்காட்சியகம் ஆனது, அந்நகரத்தின் கலாச்சார விவரிப்பு முறையில் உள்ளார்ந்த காட்சியினை வழங்குகிறது.
வாட்நகர் ஆனது குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் அமைந்துள்ளது.
இது இந்து, பௌத்தம், சமணம் மற்றும் இஸ்லாமிய கலாச்சாரத் தாக்கங்களின் மிக தனித்துவமானக் கலவைக்குப் பெயர் பெற்றது.