வாட்ஸ்அப் மூலமான தொலைத்தொடர்பு மருத்துவச் சேவை வழிகாட்டுதல்கள்
April 16 , 2025 4 days 48 0
தமிழ்நாடு அரசின் மாரடைப்பு மேலாண்மைத் திட்டம் ஆனது, 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் சுமார் 188 மாவட்ட அளவில்/ தாலுக்கா அளவில் அரசு மருத்துவமனைகளை உள்ளடக்கிய ஒரே மையத்துடன் இணைந்த பல கிளைகள் கட்டமைப்பு மாதிரியில் செயல்படுகிறது.
இந்தத் திட்டத்தின் ஒரு ஐந்து ஆண்டு அனுபவம் (2019-2023) ஆனது, பெரிய மாரடைப்புப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் சிகிச்சையளிப்பதற்கான தொலை தூர மருத்துவச் சேவை வழிகாட்டுதலை வழங்குவதற்காக என பெரிய மற்றும் சிறிய மருத்துவமனைகளின் வலையமைப்பு சேவையினை மையக் கட்டமைப்பு மாதிரியில் வழங்குவதற்கு வாட்ஸ்அப் குழுக்கள் ஒரு செலவு குறைந்தச் செயல்முறை என்பதை நிரூபித்துள்ளது.
இதன் மூலம், பெரிய மைய மருத்துவமனைகளில் உள்ள இருதய நோய் நிபுணர்கள் சிறிய பிரிவுகளுக்கு தொலைதூர மருத்துவச் சேவை வழிகாட்டுதலை வழங்கினர், என்பதோடு கூடுதலாக, அம்மருத்துவமனைகளுக்கு இடையில் நோயாளிகளின் பரிமாற்றங்களை ஒருங்கிணைக்கவும் அதன் முழுமையானச் செயல்முறையையும் கண்காணிக்கவும் இந்தக் குழுக்கள் பயன்படுத்தப்பட்டன.
மாரடைப்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நபர்களின் மேலாண்மையை மிக நன்கு எளிதாக்குவதற்காக ஒவ்வொரு கிளைக்கும் ஒன்று என 18 வாட்ஸ்அப் குழுக்கள் உருவாக்கப் பட்டன.
இந்தக் குழுக்கள் ஆனது, அங்குள்ள மைய மருத்துவமனைகளில் உள்ள இருதயநோய் நிபுணர்களுக்கும் துணை மருத்துவமனைகளில் உள்ள குழுக்களுக்கும் இடையே ஒரு தடையற்ற தகவல்தொடர்பைச் செயல்படுத்துகின்றன.
மொத்தத்தில், STEMI (ST-இரத்தக் குழாய் அடைப்பு இறுக்க நிலை மாரடைப்பு) உள்ள 71,907 நபர்கள் ஐந்து ஆண்டுகளில் சிகிச்சை பெற்றனர்.
STEMI பாதிப்பிற்குச் சிகிச்சையளிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 67% ஆண்டு அதிகரிப்பு என்பது பதிவானது.