TNPSC Thervupettagam

வாதாயன் வாழ்நாள் சாதனை விருது

November 27 , 2020 1338 days 616 0
  • மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அவர்களுக்கு வாதாயன் வாழ்நாள் சாதனையாளர் விருதானது வழங்கப்பட உள்ளது.
  • இந்த விருதானது அவரது கவிதை மற்றும் பிற இலக்கியப் படைப்புகளுக்காக வேண்டி மத்தியக் கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட இருக்கிறது.
  • இவர் இதற்கு முன்னர் இலக்கியம் மற்றும் நிர்வாகத் துறையில் அவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவை,
    • முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மூலம் சாகித்ய கௌரவ் சம்மான் விருது,
    • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வழங்கிய சாகித்ய பாரதி விருது,
    • பாரத் கௌரவ் சம்மான் விருது,
    • மொரீஷியஸால் இந்திய வம்சாவளியினருக்கு வழங்கப் படும் குளோபல் அமைப்பின் சிறந்த சாதனையாளர் விருது,
    • சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவில் உக்ரேனில் வழங்கப்பட்ட விருது,
    • துபாய் அரசாங்கத்தால் நல்லாட்சி விருது,
    • நேபாளத்தின் ஹிமால் கௌரவ் சம்மான் விருது என்பவையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்