TNPSC Thervupettagam

வானவில் நிறத்திலான கோள்

July 30 , 2022 723 days 419 0
  • குள்ளக் கோளான புளூட்டோவின் வானவில் வண்ணப் படத்தை நாசா பகிர்ந்துள்ளது.
  • இப்புகைப்படங்கள் அந்தக் கிரகத்தின் பல்வேறு பகுதிகளைப் பல்வேறு பிரகாசமான வண்ணங்களில் காட்டுகின்றன.
  • புளூட்டோ இயற்கையாக இந்த அளவிற்கு வண்ணமயமாகத் தெரியாது.
  • இந்தப் படமானது உண்மையில், அந்தக் கோளின் தனித்துவமானப் பகுதிகளை முன்னிலைப் படுத்துவதற்காக நியூ ஹாரிசன்ஸ் கலத்தின் அறிவியலாளர்களால் உருவாக்கப் பட்டது.
  • புளூட்டோ சூரியக் குடும்பத்தின் குய்ப்பர் மண்டலத்தில் அமைந்துள்ளது.
  • இது நெப்டியூனின் சுற்றுப்பாதைக்கு அப்பால் உள்ள பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கோள்கள் அடங்கிய முப்பரிமாண வளைய வடிவிலான ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்