முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருச்சியில் வானவில் மன்றம் என்ற திட்டத்தினைத் தொடங்கி வைத்தார்.
இது மாநிலம் முழுவதும் உள்ள VI முதல் VIII ஆம் வகுப்பு வரை பயிலும் வகுப்பு மாணவர்களை மனப்பாடம் செய்வது மூலம் கற்கும் முறையில் இருந்து செயல்பாட்டு அடிப்படையில் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளச் செய்யும் ஒரு முறைக்கு மாற்ற முயற்சிக்கிறது.
இந்த வானவில் மன்றத்தின் செயல்பாடுகள் ஆனது, மாநிலம் முழுவதும் தொகுதி வாரியாக சுமார் 13,200 பள்ளிகளில் சுமார் 20 லட்சம் மாணவர்களுக்குப் பலனளிக்கும் வகையில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறை வல்லுநர்களால் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த வல்லுநர்களுக்கு ‘நடமாடும் ஆய்வக’ கருவிப் பெட்டகமானது வழங்கப்படும்.