TNPSC Thervupettagam

வானியற்பியல் சார்ந்த நியூட்ரினோக்கள்

March 26 , 2024 244 days 305 0
  • அண்டார்டிகாவில் உள்ள ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தின் தரவுகளைப் பயன்படுத்தி, "மர்மத் துகள்கள்" குறித்த முதல் ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
  • நியூட்ரினோக்கள் (நுண்நொதுமிகள்) எந்தவொரு பொருளுடனும் வெகு அரிதாகவே தொடர்பு கொள்ளும் சிறிய அணு உட்கூறு துகள்கள் ஆகும்.
  • வானியற்பியல் நியூட்ரினோக்கள் என்பது நமது அண்டத்திற்கு அப்பால் உள்ள தொலைதூரத்தில் இருந்து வரும் உயர் ஆற்றல் நியூட்ரினோக்கள் ஆகும்.
  • இந்த துகள்கள் எலக்ட்ரான், மியூன் மற்றும் டௌ என்ற வகையிலான மூன்று வெவ்வேறு "வகைகளில்" பயணிக்கின்றன.
  • இதன் இறுதி வகையானது ஆய்வு செய்வதற்கும் கண்டறிவதற்கும் மிகவும் கடினமாக உள்ளதால் "மர்மத் துகள்" என்ற பெயரைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்