புவியானது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 2.4 மில்லியன் ஆண்டுகள் அளவிலான சுழற்சியில் பல்வேறு பருவநிலை மாற்றங்களுக்கு உள்ளாகிறது.
ஆழ்கடலில் உள்ள பல்வேறு புவியியல் படிவு சான்றுகள், செவ்வாய்க் கிரகத்தின் சுற்றுப் பாதையுடன் இணைக்கப்பட்ட சுழற்சி ஒன்று இருப்பதாகக் கூறுகின்றன.
புவியானது ஒரு வெப்பமயமாதல் சுழற்சியில் தற்போது சுமார் 200,000 ஆண்டுகள் என்ற நிலையில் உள்ளது.
சுமார் 1 மில்லியன் ஆண்டுகளில், புவியானது அடுத்த உச்சக் கட்டத்தினை அடையும்.
சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களின் ஈர்ப்பு புலங்கள், ஒன்றோடொன்று குறுக்கிடும் நிகழ்வு அதிர்வு எனப்படும்.
இது அவற்றின் சுற்றுப் பாதைக்கு எவ்வளவு அருகில் உள்ளது என்பதை அளவிட்டு, அந்தக் கோள்களின் மையத் தன்மையை மாற்றுகிறது.
இந்த குறுக்கீடுகள் ஆனது, பூமியில் 2.4 மில்லியன் ஆண்டுகள் என்ற அளவிலான பல சுழற்சிகளில் அதிக அளவிலான உள்வரும் சூரிய கதிர்வீச்சு மற்றும் வெப்பமான பருவ நிலைக்கு வழி வகுக்கிறது.