TNPSC Thervupettagam

வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான 15வது சர்வதேச ஒலிம்பியாட் போட்டி

August 25 , 2022 698 days 407 0
  • ஜார்ஜியாவின் குட்டாசி நகரில் நடைபெற்ற 15வது சர்வதேச வானியல் மற்றும் வான் இயற்பியல் (IOAA)-2022 ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி ஐந்துப் பதக்கங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தப் போட்டியில் இந்தியாவில் இருந்து மொத்தம் ஐந்து மாணவர்கள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் பதக்கம் வென்றுள்ளனர்.
  • இப்போட்டியில் மாணவர்கள் 3 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
  • பதக்கப் பட்டியலில் சிங்கப்பூருடன் இணைந்து இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
  • இந்திய அணியானது ஈரான் அணி (5 தங்கம்) மற்றும் கெஸ்ட் அணி (4 தங்கம், 1 வெள்ளி) ஆகியவற்றுக்குச் சற்றே பின் தங்கியுள்ளது.
  • ராகவ் கோயல் மிகவும் சவாலான ஒரு தத்துவார்த்தக் கேள்விக்கான சிறந்தப் பதிலை வழங்கியதற்காக ஒரு சிறப்புப் பரிசை வென்றார்.
  • வானியல் மற்றும் வானியற்பியல் தொடர்பான சர்வதேச ஒலிம்பியாட் போட்டி என்பது ஒரு வருடாந்திரப் போட்டியாகும்.
  • மேலும், இது ‘சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்’ போட்டிகளில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்