TNPSC Thervupettagam

வானிலை முன்னறிவிப்புகளுக்கான வெப்பக் குறியீடு

April 15 , 2025 4 days 57 0
  • சென்னையின் பிராந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது, வெப்பக் குறியீட்டைத் தற்போது சோதனை அடிப்படையில் பயன்படுத்தி வருகிறது.
  • இதைப் பயன்படுத்துவதன் மூலம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகியவை இந்த மாநிலத்தில் வாழும் மனிதர்களின் அசௌகரியத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இது முன்னறிவிக்க உள்ளது.
  • தமிழ்நாட்டிற்கான வெப்பக் குறியீட்டு வரைபடங்கள் ஆனது தற்போது வானிலை முன்னறிவிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன என்பதோடு இவை அதிக வெப்ப நிலை மற்றும் உண்மையில் நாம் உணரும் வெப்பநிலையில் ஈரப்பதத்தின் தாக்கம் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.
  • சோதனை அடிப்படையிலான இந்த வெப்பக் குறியீட்டிற்கு சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு போன்ற வண்ண குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • குடிமக்களின் அசௌகரியம் மற்றும் வெப்பம் தொடர்பான நோயகளை மிகவும் நன்கு குறைப்பதற்காக வேண்டி ஒரு கூடுதல் கவனிப்பை மேற்கொள்ளும் முயற்சியினைத் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களை இது வழங்கும்.
  • மண்ணின் வெப்பநிலை உட்பட பல்வேறு வேளாண் சார்ந்த வானிலை அளவுருக்களை அளவிடுவதற்காக வேண்டி மாநிலம் முழுவதும் மொத்தம் 22 வேளாண் சார் வானிலை தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி உட்பட மேலும் இரண்டு டாப்ளர் வானிலை ரேடார் கருவிகள் அமைக்கப்படவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்