TNPSC Thervupettagam

வானில் செயற்கைக் கோள் தகவல் தொடர்பு மையம்

December 23 , 2018 2164 days 642 0
  • தொலையுணர்வி / புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களின் தொடர்ச்சியான தகவல் பரிமாற்ற மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்தியா IDRSS என்ற அமைப்பை செலுத்த உள்ளது.
  • இந்திய தகவல் பரிமாற்ற செயற்கைக்கோள் அமைப்பானது (Indian Data Relay Satellite System- IDRSS) 2022ல் திட்டமிடப்பட்டுள்ள மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக செலுத்தப்படும்.
  • இரண்டு IDRSS செயற்கைக் கோள்களானது கீழ்க்காண்பனவற்றுடன் தொடர்ச்சியான தகவல் தொடர்பு இணைப்பைக் கொண்டிருக்கும்.
    • இந்தியாவின் தொலையுணர் / புவியுணர் செயற்கைக்கோள்கள்
    • புவியிணக்க செயற்கைக்கோள் செலுத்து வாகனம் மார்க் III (GSLV MKIII)
  • இந்த இரண்டு IDRSS செயற்கைக் கோள்களும் புவிநிலை சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும்.
  • இந்திய தொலையுணர் செயற்கைக்கோள்கள் சுற்றுவரும் பாதையில் அமைந்துள்ள 80% அளவிலான இடங்களை IDRSS செயற்கைக்கோள்களால் காண முடியும்.
  • முன்மொழியப்பட்டுள்ள இந்த அமைப்பானது செயற்கைக் கோள்களைக் கண்காணிப்பதில் தரை நிலையங்களைச் சார்ந்துள்ள நிலைமையைக் குறைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்