சண்டிகரை தளமாகக் கொண்ட இந்திய விமானப் படையின் மூன்று தளப் பழுது பார்க்கும் கிடங்கு மற்றும் மத்திய அறிவியல் கருவி அமைப்பானது இந்த முறையை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
வெட்டுக்கிளி இனப்பெருக்கத்தைத் தடுத்து நிறுத்த பூச்சிக்கொல்லியான மாலத்தியனைத் தெளிப்பதற்கு இது இரண்டு M-17 ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப் படும்.
ராஜஸ்தானில் திறம்பட்ட முறையில் வெட்டுக்கிளியைக் கட்டுப்படுத்துவற்காக வேண்டி அரசு பெல் 206-B3 என்ற ஒரு வானூர்தியைத் துவக்கி வைத்துள்ளது.