இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) ஆனது கிழக்கு லடாக்கில் உள்ள ஹான்லே இரவு வான் சரணாலயம் என்ற இடத்தில் முதன்முறையாக அதிகாரப்பூர்வ வான்வெளி உற்றுநோக்கல் நிகழ்ச்சியை நடத்தியது.
வானியலாளர்கள் தங்கள் தொலைநோக்கிகள் மற்றும் ஒளிப்படக் கருவிகளுடன் ஹான்லேவுக்கு பயணம் செய்து, ஒளி மாசுபாடற்ற இரவு வானத்தைப் படம் பிடித்தனர்.
ஹான்லே அதன் அழகிய இருண்ட வானம் மற்றும் வறண்ட வானிலைக்காக பிரபலமாக அறியப்படுகிறது.
இது வானியல் ஆராய்ச்சி மற்றும் வானியல் புகைப்படக்கலைக்கு சிறந்த இடமாக அமைகிறது.
ஹன்லே இரவு வான் சரணாலயம் (HDSR), தோராயமாக 1,073 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.
மனிதனால் உருவாக்கப்படும் ஒளி மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காகவும், அந்தப் பகுதியின் இருண்ட வானத்தின் வளத்தினைக் காப்பதற்காகவும் சமீபத்தில் லடாக் ஒன்றியப் பிரதேசத்தினால் இது அறிவிக்கப்பட்டது.