TNPSC Thervupettagam
February 11 , 2020 1751 days 753 0
  • நாசா தனது வாயேஜர் - 2 ஆய்வை அதன் இருப்பிடத்திலிருந்து, அதாவது கிட்டத்தட்ட 11.5 பில்லியன் மைல் தொலை தூரத்திலிருந்தே மேற்கொண்டது.
  • வாயேஜர் 2 ஆனது நாசாவினால் 1977 ஆம் ஆண்டில் செலுத்தப் பட்டது.
  • சூரியக் குடும்பத்தின் நான்கு பெரிய கிரகங்களை (வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன்) நெருங்கிச் சென்று ஆய்வு செய்த ஒரே விண்கலம் வாயேஜர் 2 ஆகும்.
  • வாயேஜர் 2 ஆனது வியாழனில் 14வது சந்திரனைக் கண்டுபிடித்தது.
  • யுரேனஸைக் கடந்து சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட முதலாவது பொருள் வாயேஜர் 2 ஆகும்.
  • வாயேஜர் 2 ஆனது யுரேனஸில் 10 புதிய நிலவுகளையும் இரண்டு புதிய வளையங்களையும் கண்டுபிடித்துள்ளது.
  • நெப்டியூனைத் தாண்டிக் கடந்து சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட முதலாவது பொருள் இதுவாகும்.
  • விண்மீன் இடைவெளியில் நுழைந்த இரண்டாவது விண்கலம் (நவம்பர் 2019) இதுவாகும். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் வாயேஜர் 1 ஆனது  விண்மீன் இடைவெளியில் நுழைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்