TNPSC Thervupettagam

வாராக் கடன் (NPA) குறித்து இந்திய ரிசர்வ் வங்கி

April 21 , 2020 1683 days 778 0
  • இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, வாராக் கடன் வகைப்பாட்டுக் கால அளவானது தற்பொழுது அனைத்து வங்கிகளுக்கும் 90 நாட்களிலிருந்து 180 நாட்களுக்கு மாற்றப் பட்டுள்ளது.
  • 90 நாட்கள் கால அளவுள்ள NPA (Non Performing Asset) விதியானது கடன் தவணைத் தள்ளுபடிக் கால அளவை விலக்கியுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 2020 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை அனைத்து வங்கிகளுக்கும் சேர்த்து ஒரு  செயல்படாத சொத்து வகைப்பாட்டுச் நிலையானது மேற்கொள்ளப்பட இருக்கின்றது. 
  • நில மனைத் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை திரும்பப் பெறுவதை உறுதி செய்வதற்காக, இந்திய ரிசர்வ் வங்கியானது அக்கடன்கள்  NPA ஆக அங்கீகரிக்கப் படுவதற்கு முன்பு அதற்கு ஓராண்டு கால நீட்டிப்பை வழங்கியுள்ளது.
NPA பற்றி
  • வாராக் கடன் (NPA) என்பது  ஒரு குறிப்பிட்ட கால அளவிற்குள் செலுத்தப்படாத மற்றும் மீதமுள்ள கடன்கள் அல்லது நிதிகளுக்கான வகைப்பாட்டைக் குறிக்கின்றது. 
  • அசல் அல்லது அசலுக்கான வட்டித் தொகை செலுத்தப்படாமல் அல்லது காலம் தவறியதாக இருப்பின் அது கடன் நிலுவைத் தொகை எனப்படுகின்றது.
  • கடன் ஒப்பந்தம் முறிக்கப் பட வேண்டியதாக கடன் கொடுத்தவர் கருதினாலும் கடன் பெற்றவர் கடன் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யத் தவறினாலும் அந்தக் கடன் செலுத்தாக் கடனாக மாறும்.
  • பெரும்பாலான நிலைகளில், கடனானது 90 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தப் படாமல் இருந்தால், அது NPA ஆக வகைப்படுத்தப் படும்.
  • NPA சொத்துகள் ஒரு வங்கி அல்லது இதர நிதியியல் நிறுவனத்தின் இருப்பு நிலைப் பட்டியலில் பட்டியலிடப்படுகின்றன.
  • இந்தக் கடன் நீண்ட காலத்திற்குச் செலுத்தப்படாமல் இருந்தால், கடன் கொடுத்தவர் கடன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பிணையாக முன்மொழியப் பட்ட எந்தவொருச் சொத்துக்களையும் விற்றுப் பணமாக மாற்ற கடன் பெற்றவரை வற்புறுத்துவார்.
  • எந்தவொருச் சொத்தும் பிணையாக முன்மொழியப் படவில்லை எனில், கடன் கொடுத்தவர் அந்தச் சொத்தினை வாராக் கடனாக எழுதி, வசூல் நிறுவனத்திற்கு தள்ளுபடி விலையில் விற்று விடுவார். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்