இந்திய ரிசர்வ் வங்கி வாராக் கடன்கள் மீதான தீர்விற்காக ஒரு புதிய விவேகமான கட்டமைப்பு ஒன்றை அளித்து இருக்கின்றது.
அதன் முந்தைய “வாராக் கடன்கள் மீதான தீர்விற்காக திருத்தப்பட்ட கட்டமைப்பை” உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்தப் புதியக் கட்டமைப்பு கடன் வழங்குபவர்களுக்கு கடன் கட்டத் தவறியவர்கள் மீதான கணக்கை சீராய்வு செய்ய 30 நாட்கள் கால அவகாசம் அளிக்கின்றது.
வங்கிகள் கடன்களைக் கட்டத் தவறியதன் முதல் தவணையிலிருந்து 180 நாட்களுக்கு உள்ளாக ஒரு தீர்வுத் திட்டம் ஒன்றை ஏற்படுத்திட வேண்டும்.
இந்தப் புதிய அறிக்கை அனைத்து சிறு நிதியியல் வங்கிகளுக்கும் அமைப்பு ரீதியில் முக்கியத்துவம் பெற்ற வைப்பு நிதிகள் பெறாத வங்கி சாராத நிதியியல் நிறுவனங்களுக்கும், வைப்பு நிதிகள் பெறுகின்ற நிதியியல் நிறுவனங்களுக்கும் பொருந்தும்.