ஆஸ்திரேலியாவின் வார்ட்சிலா என்னும் நிறுவனம் உலகின் முதல் பெரிய அளவிலான முழுவதும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் எஞ்சின்இயக்க மின் உற்பத்தி நிலையத்தினைத் தொடங்கியுள்ளது.
புதிய இயந்திர இயக்க மின் உற்பத்தி ஆலையானது, இயற்கை எரிவாயு மற்றும் 25% ஹைட்ரஜன் ஆகிய கலவையில் இயங்கும்.
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை அடிப்படையாகக் கொண்ட வார்ட்சிலா 31 எஞ்சின்இயக்க ஆலையானது, உலகிலேயே மிகவும் செயல் திறன் மிக்கது ஆகும்.
முழுவதும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் இயந்திர இயக்க ஆலையானது, 2025 ஆம் ஆண்டில் கொள்முதல் பதிவுகளுக்கும், மேலும் 2026 ஆம் ஆண்டு முதல் வழங்கீடுகளுக்கும் கிடைக்கப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.