TNPSC Thervupettagam
March 3 , 2019 2013 days 608 0
  • ‘புவி வெப்பமயமாதல்’ என்ற வார்த்தையை பிரபலப்படுத்தியவரான வாலஸ் ஸ்மித் ப்ரோஸ்கர் என்ற காலநிலை ஆராய்ச்சியாளர் காலமானார்.
  • 1975 ஆம் ஆண்டில் ப்ரோஸ்கர் “உலக வெப்பமயமாதலை” பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அவரது கட்டுரை வளிமண்டலத்தில் சரியாக கணிக்கப்பட்ட கார்பன் டை ஆக்ஸைடின் அதிகரிப்பானது குறிப்பிடத்தகுந்த வெப்பமயமாதலுக்கு இட்டுச் செல்லும் என்று எடுத்துக் கூறியது.
  • இந்தக் கட்டுரை 1975 ஆம் ஆண்டில் “கால நிலை மாற்றம் நாம் ஒரு பிரமாண்டமான உலகளாவிய வெப்பமயமாதலின் விளிம்பில் இருக்கிறோமா?” என்ற தலைப்பில் அவரால் பிரசுரிக்கப்பட்டது.
  • மேலும் இவர் ரேடியோ கார்பன் மற்றும் ஐசோடோப்பு காலக் கணிப்பின் முன்னோடி ஆவார். மேலும் காற்று வெப்பநிலை முதல் மழை அமைப்பு வரை அனைத்தையும் பாதிக்கக்கூடிய ஒரு உலகளாவிய நீரோட்ட அமைப்புகளான, கடல் கொணரிப் பட்டையை (Ocean Conveyor Belt) அங்கீகரித்த முதல் நபர் இவராவார்.
  • இவர் பெற்ற குறிப்பிடத்தகுந்த விருதுகள்
    • 1987 ஆம் ஆண்டில் வெட்லஸ்சன் விருது
    • 2002 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் சாதனைக்கான டைலர் விருது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்